சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுகுமார் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி துவங்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொள்ளாச்சி தொகுதியின் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுகுமாரை அக்கட்சி தலைமை அறிவிக்கப்பட்டநிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அவர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.




