சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அவர் இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.



