அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்க கேட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் அமமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.
இந்நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேமுதிக 1.கும்மிடிப்பூண்டி, 2.திருத்தணி, 3.ஆவடி, 4.வில்லிவாக்கம், 5.திருவிக நகர், 6.எழும்பூர்(தனி), 7.விருகம்பாக்கம், 8.சோழிங்கநல்லூர், 9.பல்லாவரம், 10.நிலக்கோட்டை(தனி), 11.கரூர், 12.கிருஷ்ணராயபுரம், 13.மணப்பாறை, 14.திருவெறும்பூர், 15.முசிறி, 16.பெரம்பலூர்(தனி), 17.திட்டக்குடி(தனி), 18.விருத்தாசலம், 19.பண்ருட்டி, 20.கடலூர், 21.கீழ்வேளூர் (தனி), 22.பேராவூரணி, 23.புதுக்கோட்டை, 24.சோழவந்தான்(தனி), 25.மதுரை மேற்கு, 26.அருப்புக்கோட்டை, 27.பரமக்குடி(தனி), 28.தூத்துக்குடி, 29.ஒட்டபிடாரம்(தனி), 30.ஆலங்குளம், 31.ராமநாதபுரம், 32.குளச்சல், 33.விளவன்கோடு உள்ளிட்ட தொகுதிகளும் மேலும் தொகுதிகள் தகவல் வெளியாகவில்லை.
அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டுவருவதற்கும் தீய சக்திகளை மீண்டும் தலையெடுக்க விடாமல் செய்வதற்கும், தமிழினத் துரோகிகளை வேரோடு வீழ்த்திடவும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம் pic.twitter.com/qhfeJ21APK
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு. pic.twitter.com/CI3sfH01GC
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2021




