Type Here to Get Search Results !

சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கான  ஒப்பந்தம் கடந்த 6 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. 


சட்டமன்றத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும், தனிச் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடவுள்ளது. 1.வானூர்(தனி), 2.காட்டுமன்னார் கோவில்(தனி),  3.செய்யூர்(தனி), 4.அரக்கோணம்(தனி),  5.நாகை,  6.திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் களம் காணுகிறது.



இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1.நாகை -ஆளூர் ஷா நவாஸ், 2.காட்டுமன்னார் கோயில் – சிந்தனை செல்வன், 3.செய்யூர் – பனையூர் பாபு,  4.வானூர் – வன்னிஅரசு, 5.திருப்போரூர் – எஸ்.எஸ் பாலாஜி, 6.அரக்கோணம் – கவுதம சன்னா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies