Type Here to Get Search Results !

தேமுதிக வேட்பாளர் பட்டியல்: அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தேமுதிக, அமமுக தலைமையிலான அணியில் இணைந்தது . அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. 

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்; கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர்(தனி), விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், நிலக்கோட்டை(தனி), கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர்(தனி), திட்டக்குடி(தனி), விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

மேலும், கீழ்வேளூர் (தனி), பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான்(தனி), மதுரை மேற்கு, அருப்புக்கோட்டை, பரமக்குடி(தனி), தூத்துக்குடி,  ஒட்டபிடாரம்(தனி), ஆலங்குளம், ராமநாதபுரம், குளச்சல், விளவன்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

இதையடுத்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயபிரபாகரனின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை.

தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொகுதியை குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies