Type Here to Get Search Results !

ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க டிஜிலாக்கர்: சான்றிதழ்களையும் டிஜிலாக்கரில் பெறலாம்

கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், என்.சி.டி.இ வழங்கிய ஓடிபிஆர்எம்எஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பதிவு கட்டணம் ரூ .200 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



Online Teacher Pupil Registration Management System என்று அழைக்கப்படும் ஆன்லைன் ஆசிரியர் மாணவர் பதிவு மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களை டிஜிலாக்கருடன் இணைக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 


முன்னதாகவே, டிஜிட்டல் லாக்கரில் கல்விச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஆயுள் காப்பீட்டுக் கொள்கை, சுகாதாரக் கொள்கை அல்லது மோட்டார் பாலிசி, பான் கார்டு மற்றும் வாக்காளர் ID போன்ற ஆவணங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் சேமிக்க முடியும். இந்த தளம் பாதுகாப்பானது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில், நிஸ்தா திட்டத்தின்படி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழங்கிய சான்றிதழ்கள் தானாக டிஜிலாக்கருக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ) இணையதளத்தில் https://ncte.gov.in/website/DigiLocker.aspx மற்றும் டிஜிலாக்கர் https://digilocker.gov.in/ பயன்பாட்டின் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும். டிஜிலாக்கர் ஆப்பை ஆன்ராய்டு மற்றும் ஐபோனிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஓடிபிஆர்எம்எஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் ரூ. 200 இதன் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்த டிஜிட்டல் லாக்கர் மூலமாக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், டிஜிட்டல் முறையில் வணிகம் எளிதாக்கப்படுகிறது. அண்மையில், மத்திய அரசின் டிஜிட்டல் லாக்கர் தளத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை இணைக்கும் புதிய திட்டத்தையும் தொடங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies