Type Here to Get Search Results !

இன்றுதான் எங்களுக்கு தீபாவளி என்று சொன்ன தேமுதிக: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிவிட்டு கண்ணீர் விட்ட தொண்டர்கள்

இன்றுதான் எங்களுக்கு தீபாவளி என்று அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதும் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தனர். இனிப்புகள் வழங்கினர். அதன்பின்னர் அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிவிட்டு கண்ணீர் விட்ட தொண்டர்கள்.



அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறிநிலை நிலவியது. அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் மோதல் அதிகரிக்க, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது தேமுதிக. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை தேமுதிக ஏற்கவில்லை. அதன்பின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கேயும் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இதனால், தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவுசெய்திருக்கிறது.



இதுவரையில், தேர்தலில் அதிமுகவும் திமுகவும் தேமுதிகவை வைத்துதான் கூட்டணியை இறுதிசெய்யும்.தற்போது, தேமுதிகவினுடைய மனநிலை தெரியும் வரைக்கும் பத்திரிகைகள், டிவிக்களில் எங்கெங்கும் விஜயகாந்த்தான் நீக்கமற நிறைந்திருப்பார். என்னைய வச்சுத்தான் நியூஸ் பேப்பர், நியூஸ் சேனல் எல்லாம் ஓடிக்கிட்டிருக்குது என்றுகூட விஜயகாந்த் பெருமைப் பட்டுக்கொண்டார். அந்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. ஆனால், பிரேமலதாவும் சுதீஷும் அந்த காலத்தில் வாழ்ந்ததை போலவே, இப்போதும் கனவில் மிதக்கிறார்கள் என்கிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்.


தொண்டர்களின் குமுறல் என்னவென்றால்?, மேலும், தலைவருக்கு அன்றைக்கு ஆளுமை அப்படி இருந்தது. அதனால்தான் அவர் நாக்கை துருத்தினார். அதற்காக அவர் பிள்ளையும் இப்படி வீர வசனம்  பேசினால் எப்படி? 30வயதுதான் ஆகுது தலைவர் பையனுக்கு. என்னதான் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமியை இந்த அளவுக்கு மோசமாக அந்த பையன் திட்டியிருக்க கூடாது. இந்த வயசுலேயே மூத்த தலைவர்களை இப்படி ஒருமையில் பேசுகிறாரே என்று அதிருப்தி ஏற்படிருக்கிறது. வீரா வேசம் பேசிக்காட்டுவதை எல்லாம் விட்டுவிட்டு, அதிமுகவோடு ஒழுங்காக உட்கார்ந்து பேசியிருந்தால் அவர்கள் அதிக இடங்கள் கொடுத்திருப்பார்கள். அதை செய்யவில்லை. 


2016-ல் கிங்காக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? என்று தவறான முடிவினை எடுத்தார் தலைவர் விஜயகாந்த். அதே மாதிரி  2021ஆம் ஆண்டிலும் தவறான முடிவினை எடுத்துவிட்டார்கள். இதனால், என்ன ஆகும் என்று தலைமைக்கே தெரியும். தொண்டர்கள் எங்களுக்கு தெரியாதா என்ன?


நாங்கள் தலைமை சொன்னதற்காக, தலைமையை மதித்து அதிமுகவை விட்டு வெளியேறுகிறோம் என்று சொன்னவுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினோம். ஆனால், தொண்டர்கள் எந்தளவிற்கு மன உளைச்சலில் இருக்கிறார்கள். மேலும் புலம்பி தவிக்கிறார்கள் தொண்டர்கள். மேலும், கண்ணீர் விடுகிறார்கள் என்பதை எல்லாம் தலைமை உணரவேண்டும் என்கிறார்கள் மணப்பாறை மற்றும் ஆவடி தொகுதி தேமுதிகவினர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies