Type Here to Get Search Results !

கமல்ஹாசன் கோவையை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா ?

கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குவது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி. கோவை நகரின் மையமாக இருக்கும் இந்த தொகுதியில்தான் டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் ஆகிய பகுதிகளும்  இருக்கிறது. மேலும் ஜவுளி கடைகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், ஐ.டி.கம்பெனிகள் நிறைந்திருக்கும் தொழில் பூங்காவா செயல்படுகிறது. 


கூடுதலாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவல் ஆணையர் அலுவலகம், வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய தந்தி அலுவலகம், மத்திய சிறைச்சாலை, வ.உ.சி பூங்கா, நேரு விளையாட்டு அரங்கம், கோவை ரெயில் நிலையம்  இந்த தொகுதிக்குள்தான் வருகிறது.


மேலும், எந்த ஊர்களுக்கு செல்லவேண்டும் என்றாலும், உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இருப்பதும் இந்ததொகுதியில்தான். மேலும், போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகவும், பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கும் பகுதியாகவும் இருக்கிறது. இந்த தொகுதியில் ஆண்கள் 1,25416, மற்றும் பெண்கள் 1,25,950, மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் மொத்தமாக 2,52,389 வாக்காளர்கள் உள்ளனர். அதிக வாக்காளர்களாக பெண்கள்   இருப்பதால், கமல்ஹாசன் இந்த தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது


இதுவரை, இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும்  வெற்றிப்பெற்றுள்ளன. காங்கிரஸ் 4 முறை வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த, அம்மன் அர்ச்சுணன் இருக்கிறார்.


இதுவரையிலான எம்எல்ஏகளின் பட்டியல்


1951- சுப்பிரமணியன்(காங்கிரஸ்)

1957- மருதாசலம் (இந்திய பொதுவுடமை கட்சி)

1962- பழனிசாமி (காங்கிரஸ்)

1967- கோவிந்தராஜூலு (தி.மு.க)

1971- கோபால்(தி.மு.க)


1977- அரங்கநாயகம் (அ.தி.மு.க)

1980- அரங்கநாயகம் (அ.தி.மு.க)

1984- ராமநாதன் (தி.மு.க)

1989- ராமநாதன் (தி.மு.க)

1991- செல்வராசு (காங்கிரஸ்)


1996- தண்டபாணி (தி.மு.க)

2001- மகேஸ்வரி (காங்கிரஸ்)

2006- மலரவன் (அ.தி.மு.க)

2011- சேலஞ்சர்துரை (அ.தி.மு.க.)

2016- அம்மன் அர்ச்சுணன் (அ.தி.மு.க.)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies