தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுகவில், கூட்டணி, தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்தது. கடந்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை வழங்கியது. ஆனால், இந்தமுறை தேர்தலில் வெற்றி வாகையை சூட திட்டமிட்டிருக்கும் திமுக, தொகுதி பங்கீட்டில் கறார் காட்டியது.
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள்தான் வழங்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிதான் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் நீண்ட இழுபறி நீடித்துவந்தது. மதுரவாயல், கோவில்பட்டி, கோவை வடக்கு, திண்டுக்கல், திருப்பூர் தெற்கு, பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேட்கப்பட்ட தொகுதிகளாக இருந்தது. இவர்கள் கேட்ட மதுரவாயல் தொகுதியை, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால், மார்க்சிஸ்டு கட்சிக்கு கேட்ட இடத்தை ஒதுக்குவதில் திமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டது.
3 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில், ஒருவழியாக நிறைவடைந்த நிலையில் 1.திருப்பரங்குன்றம், 2.அரூர், 3.கந்தவர்வகோட்டை, 4.திண்டுக்கல், 5.கோவில்பட்டி, 6.கீழ்வேளூர் ஆகிய 6 தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.


