வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் அதிமுக ஒதுக்கியது. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து முடிந்து 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், பட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 19 தொகுதிக்கு, வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரு பட்டியல்களை நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து, பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
1.செஞ்சி, 2.மைலம், 3.ஜெயம்கொண்டம், 4.திருப்போரூர், 5.வந்தவாசி, 6.நெய்வேலி, 7.திருப்பத்தூர், 8.ஆற்காடு, 9.கும்மிடிப்பூண்டி, 10.மயிலாடுதுறை, 11.பொண்ணாகரம், 12.தர்மபுரி, 13.விருதாச்சலம், 14.காஞ்சிபுரம், 15.கீழ்பெண்ணாத்தூர், 16.மேட்டூர், 17.சேலம், 18.சோளிங்கர், 19.சங்கராபுரம், 20.சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, 21.பூந்தமல்லி, 22.கீழ்வேளூர், 23. ஆத்தூர் ஆகிய 23 இடங்களில் பாமக போட்டியிட உள்ளது.


