தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தலைமை வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இதையடுத்து, நேற்று இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டனர்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், க.பாண்டியராஜன், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருந்த லால்குடி தமாகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தஞ்சாவூரை அதிமுக எடுத்துக்கொண்டது. மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) – இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சாவூர் – அறிவுடைநம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மேட்டூரில் எஸ். சதாசிவமும், பூந்தமல்லியில் (தனி), எஸ். எக்ஸ் ராஜமன்னார், சங்கராபுரத்தில் மருத்துவர் ராஜா, வந்தவாசியில் (தனி) முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


