அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கேட்டு வந்தது. ஆனால், அதிமுக தரப்பு 6 தொகுதிகளை தருவதாக கூறியாது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பாக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், நேற்று அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அதேபோல், கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சிபாரதம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
மேலும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கேட்டு வந்தது. அதிமுக தரப்பு 6 தொகுதிகளை தருவதாக கூறி வந்தது. எங்களின் கோரிக்கையை, அதிமுக ஏற்கும் என்று நம்புகிறோம். அது கிடைக்கும் வரை எங்கள் பேச்சு வார்த்தை தொடரும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இந்தநிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


