தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறயிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், விசிக 6 தொகுதிகள், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்வர்டு பிளாக், ஆதிபேரவை, வாழ்வுரிமை கட்சிகளுக்கு தலா 1 இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக 174 இடங்களில் போட்டியிடுகிறது.
இதையடுத்து, தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் திமுக போட்டியிடும் 174 தொகுதிகள் மட்டுமில்லாது, கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் களம் காண்கின்றனர். இதன் மூலமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காணவுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத வரலாறு என்று ஸ்டாலினை மெச்சிக்கொள்கின்றனர் திமுகவினர்..!


