சின்னம்மாவை வரவேற்க எல்லாரும் மகிழ்ச்சியோடு இருக்கும் நிலையில், ஒரு சில அமைச்சர்கள் மட்டும் பதற்றம் அடைவது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதவில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள்.
அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும், டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய் புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதால் கொடியை பயன்படுத்தும் அனைத்து உரிமையும் அவருக்கு இருக்கிறது என டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த அமைச்சர்கள், இன்று இரண்டாவது முறையாக டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர்.
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. 1/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். 2/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறத 3/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 5/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
சசிகலா வரும் 8ஆம் தேதி தமிழகம் வரவிருக்கும் சூழலில் டிஜிபியிடம் மனு, அம்மா நினைவிடம் மூடல் என இத்தனை நடவடிக்கையை அதிமுக அடுத்தடுத்து செய்வதற்கான காரணம் என்ன என்பதே பலரது கேள்வியாக உள்ளது.



