Type Here to Get Search Results !

சசிகலா ஊரை அடித்து கொள்ளையடித்தவரா ? அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அருணன் கேள்வி

ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் தண்டனை பெற்றவர் சசிகலா. அவர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவை சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் டிடிவி தினகரனும் சசிகலாவும் செயல்படுகின்றனர் என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது புகார் அளித்தபின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வந்து அதிமுகவையும் கைப்பற்றப்போகிறார் என்று செய்தி வரும்நிலையில், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதால் கொடியை பயன்படுத்தும் அனைத்து உரிமையும் அவருக்கு இருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த அமைச்சர்கள், இன்று இரண்டாவது முறையாக டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு குறித்து முத்த அரசியல் விமர்சகர் அருணன், ‘’இது நடந்தது எப்ப? அதிமுக ஆட்சியில்தானே! முதல்வர் ஜெ. யின் இல்லத்தில் இருந்த சின்னம்மா “ஊரையடித்து கொள்ளையடித்தது” தங்களது ஆட்சியில்தான் என்பதை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார்! இதுதான்யா நேர்மை!’’என்றும்,


ஜெ. யின் உடன்பிறவா சகோதரி, உயிர்த் தோழி, சின்னம்மா என்று உங்களால் அழைக்கப்பட்டவர், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டவர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கப்பட்டவர் இவ்வளவு மோசமானவரா? ஐயகோ’’என்றும் கமெண்ட் செய்துள்ளார்.


சின்னம்மாவை வரவேற்க எல்லாரும் மகிழ்ச்சியோடு இருக்கும் நிலையில், ஒரு சில அமைச்சர்கள் மட்டும் பதற்றம் அடைவது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies