கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா காரில் அ.தி.மு.க கொடியை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுகவினர் புகார் அளித்த நிலையில் டிஜிபியிடம்அமைச்சர்கள் மீண்டும் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக டிஜிபியிடம் புகார் அளித்த அமைச்சர்கள் அங்கு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி.தினகரன் செயல்படுகின்றனர்.
உச்ச நீதமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை.100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். யார் அதிமுகவினர், இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது.
4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். கொள்ளையடித்த வழக்கில் தண்டனை பெற்றவர் சசிகலா. உண்மையான அதிமுக ஓபிஎஸ்–ஈபிஎஸ் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. டிஜிபி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை தடுக்க முடியாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் கலவரம் ஏற்பட்டால் அதற்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.


