நடிகர் ரஜினிகாந்த் போனில் சசிகலா உடல் நலம் குறித்து நலம் விசாரித்ததாக டிடிவி.தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன், 'சின்னம்மாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது. சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவிலும், தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு நிகழ்த்திய தொண்டர்களுக்கு நன்றி. அம்மாவின் உண்மை தொண்டர்கள், லட்சோபலட்சம் கழக உடன்பிறப்புகள் பொது மக்களுக்கு நன்றி. இந்தநிலையில், பல்வேறு தரப்பிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக நெருக்கடி அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்தார் என்றார். முன்னதாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி இன்று சென்னை வந்துள்ளார். காரில் 23 மணிநேரம் பயணம் மேற்கொண்ட அவர் சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார்.



