சசிகலா சென்னை வந்தடைந்தார். சென்னையில் தி.நகர் வந்தடைந்தார். நேற்று காலை 7.00 மணிக்கு கர்நாடகாவில் புறப்பட்ட சசிகலா 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை சென்னை தி.நகருக்கு வந்தார்.
சசிகலாவுக்கு வழிநெடுகிலும் விடிய விடிய தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் இல்லம் சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சைதாப்பேட்டை சின்னமலையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர் தொண்டர்கள்.


