தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும்நிலையில், அரசியல் தலைவர்கள் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம் வந்து மக்களை ஈர்த்து வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி பாஜகவின் அமைத்திருக்கும் முக்கிய தலைவர் அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார்.
முன்னதாக பிப்ரவரி 21ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலமும், பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது.


