அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சி முடியப்போகும் நேரத்தில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் மக்களை ஏமாற்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. பொய் சொல்வதில் முதல்வர் பழனிச்சாமி டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அத்திக்கடவு–அவினாசி திட்டம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கிய திட்டம் இல்லை. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இதில், டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் அதிமுக ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது. அதேபோல், ஊழல் திட்டத்திற்கு மாற்று பெயராக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. தமிழகத்தில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்கள், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிடுகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் அமர்ந்ததும் திருநங்கைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.


