Type Here to Get Search Results !

மசினகுடி கல்லட்டி மலைப்பாதையில் செல்லவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது : மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு!! #மசினகுடி #Machinagudi #Udagai

தொடர் விபத்து எதிரொலியாக உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த சாலை வழியே சென்ற வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையின் வழியே செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்தது. மேலும் உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதி வழங்கியது.

வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் இரண்டு ஆண்டுகளாக எந்தவித விபத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த சாலையில் கடந்த வாரம்முதல் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தற்போது, இந்த சாலையில் வாகனங்கள் ஓட அனுமதித்த ஒரு ஒரு வாரத்தில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. பெரும்பாலும் விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் கேரள பதிவு எண் கொண்டதாகும்.

எந்த உயிர் சேதமும் ஏற்படாத நிலையில், மீண்டும் வாகனங்களை அனுமதித்தால் உயிர்ச்சேதம் ஏற்படும். இத்தில், விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளதாக பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்த நிலையில், இந்த சாலை வழியே செல்லும், பிற மாநில வாகனங்களுக்கு தடை விதிப்பதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies