இணையதளத்தில் வந்த மசாஜ் விளம்பரத்தை நம்பி, பல பெண்களிடம் 11,000 ரூபாய் ஏமாந்த ஒரு வாலிபரின் சோக கதையை கேட்டு போலீசார் சிரித்தார்கள்.
கர்நாடகாவின் பெங்களூரில் காக்ஸ் டவுனில் வசிக்கும் கரண் என்ற 41 வயதான நபர் ஒரு தகவல் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் பிப்ரவரி 14-ஆம் தேதியன்று, காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்தார். அவருக்கு காதலி யாருமில்லாததால் பாங்காங் மசாஜ் செய்து கொண்டாட எண்ணினார். அதனால், அவர் www.sutramassage.com என்ற தளத்தைப் பார்த்தார்.
அந்தவெப்சைட்டில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாட, முன்பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட எண்ணுக்கு டயல் செய்தார். அப்போது, பேசிய ஒரு பெண், பிப்ரவரி 14 அன்று கமனஹள்ளியில் மாலை 6 மணியளவில் தனது முகவர் ஒருவரை சந்திக்கச் சொல்லியுள்ளார். அதன்படி, கரண் அந்த பெண் சொன்ன முகவுரை சந்திக்க அவர் சொன்ன இடத்திற்கு சென்றார்.
அப்போது, அங்குவந்த முகவர் சவுதி, கரனை கம்மனஹள்ளியில் ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு அவர் உடனே 6,000 ரூபாய் பணம் கொடுத்தால் பெண்கள் இங்கே வந்து மசாஜ் செய்வார்கள் என்று கூறினார். அதை உண்மையென்று நம்பிய அவர் உடனே அவரின் அக்கௌன்ட்டிலிருந்து 6,000 ரூபாயை அனுப்பினார்.
இதையடுத்து, அந்த பகுதிக்கு மூன்று பெண்கள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். வந்த பெண்கள் கரணிடம் மேலும் 5,000 ரூபாய் கொடுக்கவில்லையென்றால் இங்கே கத்தி கூச்சலிட்டு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போலீசில் பிடித்து கொடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அதனால், கரண் மேலும் 5,000 ரூபாய் கொடுத்தார். அதன்பிறகு அந்த கூட்டத்தினர் அணைவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இதையடுத்து, கரண் அங்குள்ள காவல்நிலையத்தில் அந்த பெண்கள் மீது புகார் கொடுத்தார் .