நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாம். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று உலகத் தாய்மொழி தினம். ஆண்டுதோறும், பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சாதி, மதங்கள் கடந்து அனைவரும் ஒன்றினையும் ஒரே விசயம் தாய் மொழி மட்டுமே.
இதிலேயும், பல்லாயிரமாண்டு காலமாக அழியாத விஷயமாக மக்களை ஒன்றிணைக்கும் தமிழ் மொழியை மக்கள் பேணி காத்து வருகிறார்கள். இன்றைய, இளையதலைமுறையினரும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இன்று, உலகத் தாய்மொழி தினம்.
இதில், உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகிய உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் உலக தாய்மொழி தினத்திற்கு வாழ்த்து கோரியுள்ளார்.
"தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
— O Panneerselvam (@OfficeOfOPS) February 21, 2021
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!"
உலகத் தாய்மொழி தினமான இன்று, உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகிய உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் "உலகத் தாய்மொழி தின" நல்வாழ்த்துகள்! pic.twitter.com/QaWZiDSWMQ
— RS Bharathi (@RSBharathiDMK) February 21, 2021