ஒரு குடும்ப சண்டையில் ஒரு மனைவி தன்னுடைய கணவர் மற்றும் மாமியாரை அடித்து, கொன்று விடுவதாக மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அகமதாபாத்தின் ஜெய் அம்பேநகர் சொசைட்டியில் வசிக்கும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வைரல் படேல் என்ற 28 வயதான நபர், கடந்த ஆண்டு டிசம்பரில், அமிரைவாடி குடியிருப்பாளரான சகுந்தலாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களோடு அவரின் தாயாரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சகுந்தலா கர்ப்பமானார். இதையடுத்து, அந்தப்பெண் தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டு கடந்த வாரம் தன்னுடைய கணவரின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரின் கணவரிடம் அந்த பெண் ,அவரின் தாயாரை பற்றி நிறைய புகார் கூறினார்.
அதனால், அந்த பெண் சகுந்தலா மிகவும் கோபமுற்றார். கோபத்தில் கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். தன்னுடைய கையை மடக்கி கணவரையும் அவரின் மாமியாரையும் குத்துவிட்டு, அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதையடுத்து, செம்மையாக அடிவாங்கிய கணவனும் மாமியாரும் பயந்துபோய், உடனே காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய மனைவி மீது புகார் கூறினார். போலீசார் குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.