உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.
கொரோனா பேரிடரை தொடர்ந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து, பாம்புக் கடி, மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உயிரிழந்த 176 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியும் , உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் 37 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் இறந்த 62 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, உயிரிழந்த 62 காவலர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக சாலை விபத்து மற்றும் நீர் நிலைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியும் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.