தமிழகத்தில் இன்று, நாளை இருதினங்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றிலும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றிலும் சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு-புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 23, 24ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நேற்று காலை நிலவரப்படி, கோத்தகிரியில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குன்னுார் 7செ.மீ; சோத்துப்பாறை, 6 செ.மீ; அலகாரி எஸ்டேட், 5 செ.மீ; தண்டராம்பேட்டை, மே மாத்துார், 4 செ.மீ; பெரம்பலுார், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



