Type Here to Get Search Results !

பெட்ரோல் விலை ஏற்றம்: ஒரேநாளில் இவ்வளவு ஏறிடுச்சா? வாகன ஓட்டிகள் ஷாக்!

பெட்ரோல்–டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருளின் விலையும் உயரும் அச்சம் பொதுமக்களிடையே நிலவிவருகிறது. 


இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் – டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு தற்போது பெட்ரோல்-டீசல் தேவை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது.


இந்தநிலையில், இந்தியாவின் சில்லறை விற்பனையாக  பெட்ரோல்-டீசலுக்கு 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம்  மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கிறது. இந்தநிலையில், எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இந்தநிலையில், பெட்ரோல்-டீசலின் விலை கடந்த ஒரு வாரமாகவே ஏற்றப்பட்டு வரும்நிலையில், இன்றும் அதிகரித்துள்ளது.


இதையடுத்து, சென்னையில் நேற்றைய விலையின்படி  பெட்ரோல், லிட்டருக்கு 92.25 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59 ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 85.98 ரூபாயும் இன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருளின் விலையும் உயரும் அச்சம் பொதுமக்களிடையே நிலவிவருகிறது. எதிர்க்கட்சிகளும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்றன. ஆனால், விலை ஏற்றத்தைத் தவிர எந்த மாற்றமும் இல்லை 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies