காவிரி -குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில் காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நதிகள் இணைப்பு திட்ட முதல் கட்டத்திற்கு ரூ.6, 941 கோடி மதிப்பில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை மாவட்ட குன்னத்தூர் ஊராட்சியில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ரூ.3,384 கோடியில் காவிரி உபவடி நிலத்தில் நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.
காவிரி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து குண்டாற்றுடன் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவு நிறைவேற்றும்.


