Type Here to Get Search Results !

அன்று தந்தை…! இன்று மகன்..!! அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன் #ActorSivakarthikeyan

திரைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு  கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பது வழக்கம். இந்தநிலையில், 2019-2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 


இதில் தமிழின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனும் ஒருவர். நடந்த இந்த விழாவில், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில், சிவகார்த்திகேயன் அப்பா அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் விருது வாங்கிய படத்துடன் இப்போது சிவகார்த்திகேயன், முதலமைச்சர் பழனிசாமியிடம் வாங்கிய அவார்ட்டையும் சேர்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியில், அறிமுகமாகி பின்பு முன்னணி சினிமா நடிகராக வலம்வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அப்பா பெயர் தாஸ். அவரது தாயார் பெயர் ராஜி. 

இதில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை கண்காணிக்கும் பிரிவில் பணியில் இருந்தார். 


இவர், கோவை குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த பிரச்னையால் தாஸ் கடந்த 2013 ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதகக்து.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies