ஒரு வீட்டிற்கு அடிக்கடி வந்த உறவினரால் அந்த வீட்டிலிருந்து ஒரு பருவப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதால் அந்த உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், சர்தானா நகரில் 15 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இதையடுத்து, அந்த வீட்டிற்கு தூரத்து உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வார். அந்த உறவினருக்கு அந்த வீட்டிலிருந்த பெண் மீது மோகம் பிறந்துள்ளது. இதையடுத்து, ஏதாவதொரு சாக்குபோக்கு சொல்லி அடிக்கடி அந்த வீட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் கடந்த வியாழக்கிழமையன்று தனியாக வீட்டிலிருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே போயிருந்தார்கள். அப்போது இந்த விஷயம் அந்த தூரத்து உறவினருக்கு தெரிய வந்துள்ளது. அதனால் அவர் தனியாக அந்தவீட்டிலிருந்த பருவப்பெண்ணை அடைய திட்டமிட்டார்.
அதனால், அவர் அந்த வீட்டின் பெற்றோரை தேடி வருவது போல் அந்த வீட்டிற்க்கு வந்தார். பின்னர் அவர் அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தார். இதையடுத்து, வீட்டிற்குள்ளிருந்த அந்த பெண் யாரென்று பார்த்த போது தன்னுடைய உறவினர் என்று தெரிந்ததும் கதவை திறந்தார்.
இந்தநிலையில், வீட்டிற்குள் வந்த அந்த உறவினர் வீட்டின் கதவை தாழ் போட்டுவிட்டு, அந்த பெண்ணிடம், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை காமித்தார். மேலும், துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டு விடுவதாக மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக, ஒரு பழைய வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த பெண் இந்த விஷயத்தை அவரின் பெற்றோரிடம் கூறியதும், அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் போலிஸார் வழக்கு பதிந்து அந்த உறவினரை தேடி வருகிறார்கள்.


