அமைச்சர் பதவியின் மரியாதையை காப்பாற்றும் வகையில் நடந்துகொள்ளுங்கள் என்று சி.வி.சண்முகத்திற்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “டெண்டர் விடுவதிலும் ,ஊழல் செய்வதிலும் அதிமுக அரசு தீவிரம் காட்டுகிறது. முதலில் அணை என்று கூறினார்கள்; பின்னர் சுவர் என்று சொன்னார்கள்; அணையே காணோம் என்று மட்டும்தான் சொல்லவில்லை. அணை உடைப்பு விவகாரத்தில் பொதுப்பணித் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு பதில் சொல்வாரா? இல்லை என்றால் எல்லாம் தெரிந்த மேதாவி போல் பேசும் சி.வி. சண்முகம் இதற்கு பதில் சொல்வாரா? கண்துடைப்புக்காக தான் சில பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரயில் இன்ஜினை திருடியவரை சும்மா விட்டுவிட்டு கரித்துண்டு எடுப்பவர்களை கைது செய்து தண்டனை கொடுக்கிறார்கள். சி.வி. சண்முகத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது; மதிப்புக்குரியது. அந்த மரியாதையை காப்பாற்றும் வகையில் நடந்துக்கோங்க பேசுங்க.
மக்கள் தங்கள் குறைகளைப் பகிரும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சி விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இருந்து நேரலை. https://t.co/3jEdvVRLFL
— M.K.Stalin (@mkstalin) February 12, 2021
சி.வி. சண்முகம் என்னை ஒருமையில் பேசுகிறார். அதனால் நான் குறைந்து போவதில்லை . பேரறிஞர் அண்ணா அடிக்கடி தனது பேச்சின்போது ஒரு கதை சொல்வார். ஒரு கோயில் யானையை குருக்கள் ஒருவர் சுத்தமாக குளித்துவிட்டு விபூதி பூசி அழைத்து வருவாராம். அப்போது எதிரே ஒரு பன்றி ஒன்று சகதியில் புரண்டு எழுந்துவருமாம். பன்றியை பார்த்த யானை சற்று நகர்ந்து செல்லுமாம். ஆனால் பன்றி நினைக்கும் யானை பயந்து விட்டது என்று. அது போல் இருக்கிறது இவர்பேசுவது” என்று கூறினார்.


