Type Here to Get Search Results !

'கதறியழுத பட்டியலினப் பெண்' 'கட்டியணைத்து கண் கலங்கிய கனிமொழி எம்.பி #KanimozhiMP #DMK

நிகழ்ச்சியில், பட்டியலினப் பெண்களை ஒதுக்குவதாக கண்ணீர் மல்க தெரிவித்த பெண்ணை, திமுக எம்.பி கனிமொழி கட்டித்தழுவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தருமபுரியில் திமுக சார்பில் விடியலைத்தேடி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். 


கனிமொழியின் வருகையையொட்டி, ஏரியூரில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில பட்டியலின மக்கள் பலர் பங்கேற்ற நிலையில், அவர்களது குறைகளை கனிமொழி எம்.பி கேட்டறிந்தார்.


அப்போது, பட்டியலின பெண் ஒருவர், பட்டியலினம் என்பதால் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். தலைவர்கள் வரும் போது ஆரத்தி எடுக்கக்கூட எங்களை அனுமதிப்பதில்லை என்றுகூறி கண்ணீர் மல்க அந்த பெண் பேசினார். 

அதைக் கேட்டு மனமுருகிய கனிமொழி, எழுந்து ஓடிவந்த அந்தபெண்ணை ஆரத்தழுவி கண் கலங்கினார். இதைக் கண்ட அப்பகுதி மக்களின் மனம் நெகிழ்ந்து போனது. கர கோஷத்தால் கனிமொழியின் செயலை அந்த பட்டியலின மக்கள் வரவேற்றனர்.


இதையடுத்து பேசிய எம்.பி  கனிமொழி, இது போன்ற சம்பவங்களையும், பெண்களின் கண்ணீரை துடைக்கவும் திமுக பாடுபடும் என உணர்ச்சி வசத்துடன் தெரிவித்தார். 

அப்போது அங்கிருந்து பல பெண்களின் கண்களில் கண்ணீர் பெருகியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies