மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 21ஆம் தேதி அன்று நடைபெறும் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டிடுவதா? கூட்டணி அமைப்பதா? என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவெடுப்பார் என்றும் கட்சியினர் மட்டத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
சீரமைப்போம் தமிழகத்தை என்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற கமல்ஹாசன், சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வருகிறார். இருந்தாலும், காணொளி மூலமாக பிரச்சாரம் செய்ய, அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
திமுகவுடன் கூட்டணி, ஓவைசியுடன் கூட்டணி என்றெல்லாம் பேச்சு இருக்கும் நிலையில், இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் முடிவை எடுக்கிறார் கமல்.


