மும்பை உயர்நீதிமன்றம்தான் இன்று இந்திய அளவில் மிகவும் கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் நீதிபதி புஷ்பா கனெடிவாலா. என்னதான் காரணம் என்று பார்ப்போம். ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது.
இதில், ஸ்கின் டு ஸ்கின் டச் ஆனால்தான், அது போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும் என்றும், இளைஞரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அந்த இளைஞர் பிடித்திருந்ததை வைத்தும், பாலியல் வன்கொடுமை என்று கருதிவிட முடியாது என்றும் சொன்ன நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் தீர்ப்புகளால் இந்தியாவே அதிர்ந்து போனது. இதைத்தொடர்ந்து, மனைவியிடம் கணவன் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது அதிரடி காட்டினார்.
இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீல் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி கனெடிவாலாவுக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 ஆணுறைகளை அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில், பிப்ரவரி 9 ஆம் தேதி மொத்தம் 12 இடங்களில் இருந்து அவருக்கு ஆணுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கனெடிவாலா, ஒரு பெண்ணாக, நான் எந்தத் தவறும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. எந்தகுற்றமும் செய்யவில்லை. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறினார்.


