Type Here to Get Search Results !

சசிகலாவின் அதிரடி திட்டம் ! தூசி தட்டும் 2017ஆம் ஆண்டு வழக்கு #Sasikala #ADMK

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில், ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிலையில் முதல்வராக பொறுப்பு ஏற்க இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். 

இதனை சாதகமாக்கிக்கொண்ட  ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒரு கட்டத்தில் இணைந்து கட்சியை வழிநடத்த தொடங்கினர். அதேசமயம் கட்சியில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதை இருவரும் உறுதி செய்தனர்.


இதைத்தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தப்பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில்,  அதிமுகவின்  பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா உள்ள நிலையில், சட்டவிரோதமாக கட்சியின் செயல்பாடுகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடத்துவதாகவும், அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளரராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க கோரியும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்தவழக்கு, விசாரணை தொடங்கி மூன்று ஆண்டுகள் மேலாகியும் தற்போது வழக்கு பட்டியலிடபடாமல் நிலுவையில் இருந்து வருகிறது.


இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  மார்ச் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies