Type Here to Get Search Results !

ஈஷா நடத்தும் இலவச மருத்துவ முகாம்

கோவை ஈஷாவின் ஆரோக்கியஅலை அமைப்பின் சார்பில் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரத்தில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்தசேவைகளில் யோகா மையம், பசுமை விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இந்தநிலையில், ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.

மேலும், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து தொண்டாமுத்தூரில் உள்ள விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிப்ரவரி 21ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 

அதேபோல், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆல் இஸ் வெல் ரத்த தான இயக்கத்துடன் இணைந்து தேவராயபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் பிப்ரவரி 28ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.


இந்நிலையில், காலை 8 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் இம்முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதுதொடர்பான, கூடுதல் தகவல்களுக்கு 90801 78524, 95242 90388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கடந்த வாரங்களில் பூலுவப்பட்டி, கரடிமடை ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies