சென்னையில் நிருபர்களிடம் பேசிய மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த இந்த வேளாண் சீர்திருத்த சட்டங்களை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
அதாவது, மத்திய அரசின் கொண்டுவந்த இந்த வேளாண் சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக கொடுக்கின்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தவறு செய்கின்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள் வருகிறபோதே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை.
இளம் தலைமுறையினர்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். இளைஞர்கள் நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.' எனக் கூறினார்.


