சென்னை எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, இப்போ அதிமுகவினர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆட்சியை அளிப்போம் என்று கூறாமல், ஜெயலலிதா ஆட்சியை அளிப்போம் என கூறுகின்றனர்.
ஜெயலலிதா தமிழகத்தின் உரிமையை என்றுமே விட்டுக்கொடுத்தது இல்லை. தற்போது இருக்கும் அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். ஜெயிலுக்கு செல்லக்கூடிய அமைச்சரில் ஒருவர் தங்கமணி. ஒப்பந்தத்தை மீறியுள்ளார். வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாத ஒரு நபர் முதல்வராக உள்ளார்.
அதிமுக, அம்மா ஆட்சி அமைக்கப்போகிறோம் என்றார்கள். டிடிவியை பார்த்து ஊத்திக்கொடுத்தவர் என்று கூறுகிறார்கள். அப்படியானால் ஊத்திக்கொடுத்த மது போதையில்தான் இந்த ஆட்சி அமைந்தது.
தமிழ்நாட்டில் ஒருபோதும் தாமரை மலராது. எடப்பாடி பழனிச்சாமி சொந்த புத்தி இல்லை. ஸ்டாலின் தந்த புத்தி தான் இருக்கு. இங்கே நீட் தமிழகத்திற்கு கிடையாது, தமிழகத்திற்கு உதய் திட்டம் வராது, வர்தா உள்ளிட்ட புயல் நிவாரண நிதிகளை முழுவதுமாக அளிக்கிறேன் என்று மோடி கூறினாரே, என்னவாயிற்று ? மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார். அம்மா ஊழல் செய்தார்கள் தண்டனை பெற்றார்கள்.
அதேபோல், நாங்களும் ஊழல் செய்வோம். இதுதான் அம்மாவழி ஆட்சி. அம்மா வழியில் நடைக்கிறோம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.நாங்கள் மற்றவர்களின் உணர்வை மதிக்கவும், மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகே வேலை கையில் ஏந்துகிறோம். மாறாக திமுக கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக உள்ளது. எனக் கூறினார்.


