இரவு–பகல் பாராமல் எந்நேரமும் உறவு வைத்துக்கொள்ள அழைத்ததால் கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவியின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறது ஈரோடு மாவட்டம்.
ஈரோடு அந்தியூர் காலணியை சேர்ந்த நந்தகுமாருக்கும்(33), கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர் மைதிலி(20) என்பவரை திருமணம் செய்துகொண்டார். சொந்தமாக இருந்த 3 ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை பார்த்துக்கொண்டு, மாவு மில்லிலும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 28ஆம் தேதி அன்று தோட்டத்தில் பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு வந்து காலை டிபன் சாப்பிட வந்துள்ளார். சாப்பாடு கசப்பாகவே இருக்கவே அவர் மைதிலியிடம் கேட்டிருக்கிறார். அவர் சரியான பதிலை சொல்லாததால் பாதி சாப்பாட்டுடன் எழுந்து வேலைக்கு சென்றுவிட்டார் நந்தகுமார். மதிய உணவும் கசப்பாக இருக்கவே அதை கீழே கொட்டிவிட்டார்.
ஆனால், உடலில் நிறைய மாற்றங்கள் வந்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடினார். உடலில் விஷம் கலந்திருப்பதாக டாக்டர்கள் கூறியதோடு, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 15ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிகிச்சையின்போதே, மனைவி மைதிலி மீது சந்தேகப்பட்ட நந்தகுமார் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இறந்துவிட்டதால், போலீசார் அவரிடம் விசாரித்ததில், இரவு–பகல் பாராமல் எந்நேரமும் உறவு வைத்துக்கொள்ள அழைப்பார். இதனால் ஆத்திரப்பட்டுதான் சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டேன் என்று சொல்லி அதிரவைத்தார்.
இந்தநிலையில், ஐந்தமாத கர்ப்பிணியாக இருக்கும் மைதிலி, தற்போது, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.



