சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட இன்று இளவரசி விடுதலையானார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சசிகாலவின் உறவினர் இளவரசி, சுதாகர் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். நன்னடத்தை காரணமாக கடந்த ஆண்டே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் முழுமையாக சிறைவாசம் முடிந்து கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில, சசிகலா தற்போது பெங்களூருவில் தனியார் விடுதியில் ஓய்வில் இருக்கிறார். வரும் 8ம் தேதி சசிகலா தமிழகம் வரவிருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, தற்போது பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இளவரசி விடுதலை செய்யப்பட்டார். சசிகலாவுக்கு உறவு முறையில் அண்ணியான இளவரசி மின்சார விபத்தில் தனது கணவரை இழந்து விட்டதால், சசிகலாவுடன் போயஸ் கார்டானிலேயே வாழ்ந்துவந்தார். தற்போது, சிறையில் இருந்து விடுதலையான இளவரசி தனது மகன் வீட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


