கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நடத்தி வந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது, கந்த சஸ்டி கவசம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதில், கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததால் 2 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சுரேந்திரன் மனைவி கீர்த்திகா, செந்தில்வாசன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


