கூட்டுறவு வங்கிகளில் 16,43 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கடனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடன்களை கடந்த 2016ஆம் ஆண்டில் தமிழக அரசு ரத்து செய்திருந்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு முன்பே, அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயக் கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யவுள்ளது.
இந்த அறிவிப்பு விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


