பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்காக ஆவணங்கள் அனுப்பப்பட்ட நிலையில் இதுகுறித்து பல மாதங்களாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க, ஒருவார காலம் தமிழக ஆளுநருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டரீதியாக ஆலோசனை செய்யப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்று விளக்கமளித்துள்ளார்.


