சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தனது காரில் அதிமுக கொடியுடன், வெளியில் வந்ததிலிருந்தே அவர் போருக்கு தயாராகிவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.
சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு ரிசார்ட்டுக்கு செல்ல மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அதிமுகவின் கொடி அந்தக் காரில் பொருத்தப்பட்டிருந்தது. இதிலிருந்தே... சசிகலா அதிமுகவை கைப்பற்றப் போவதற்கான அறிகுறிகளை தெள்ளத்தெரிவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது; போருக்கு தயாராகிவிட்டார் சசிகலா. அதிமுகவை சசிகலா வழி நடத்துவார். சசிகலா சென்னைக்கு வந்த பின்னர் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறும். தர்மயுத்தம் நடத்தியவர்களும், நம்பிக்கை துரோகம் செய்தவர்களும் சசிகலாவால் நிராகரிக்கப்படுவர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் சரித்திரம் முடிவுக்கு வரும் என்று மனதார நம்புகிறேன்.
டி.டி.வி.தினகரனிடம் எந்த ஜனநாயக பண்பும் இல்லை. அவர் தலைமையில் இருக்கும் அமைப்பு பின்னடைவை சந்திக்கிறது. சசிகலா டிடிவி.தினகரனை நம்பி ஒரு பணிகளை ஒப்படைத்து சென்றால் அது வீழ்ச்சியை நோக்கி தான் முடியும் என்று தெரிவித்தார்.


