சசிகலா வருகையையொட்டி பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது, எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட டிடிவி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு எல்லையான அத்திப்பள்ளி முதல் சென்னை இல்லம் வரை வரவேற்பை கவனத்துடன் அமைத்து கொள்ள வேண்டும் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், வரும் 8 ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்க அமமுகவினரும், அதிமுகவிலுள்ள அவரது தொண்டர்களும் திட்டமிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சசிகலா வருகையின்போது, தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வேலூரை அடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட இடங்களில் தியாக தலைவிக்கு நாம் அளிக்கும் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது.தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதி :
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது! எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள்! pic.twitter.com/lcjlOZBvYx
நாம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் தமிழகம் வருகிற நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ந்து கொண்டாடுகிற நாளாக மாற்றிடுவோம்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் எதிரியான தீய சக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்கிற பணியை முழு உத்வேகத்தோடு முன்னெடுத்திடுவோம் என்று கூறியுள்ளார்.


