திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியபோது, ஊர்வலம் செல்ல தடை, திடீரென்று நினைவிடம் மூடப்பட்டிருக்கிறது.
இன்னும் 2 நாட்களில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்ப்போம். பொது வாழ்வில் நீதியை கடைப்பிடிப்பவன் என நீதிமன்றத்தால் பாராட்டப்பட்டவன் நான்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படும். தைரியமிருந்தால் வழக்கு தொடரட்டும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். முதல்வர் உள்பட அனைவரும் என் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார்கள். ஆனால், யாரும் வழக்கு தொடுக்கவில்லை.
அதேப்போல், பொதுப்பணிதுறையில் டெண்டர் வழங்கியதில் ஊழல். ஆனால், யார் மீது ஊழல் இல்லை என மு.க.முதல்வர் கேட்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீதான லஞ்ச வழக்கை போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. அதற்கு நீதி மன்றத்தில் ஸ்டே வாங்கி வைத்துகொண்டு மாநிலத்தை ஆண்டு வருகிறார்.
பச்சை துண்டு முதல்வர் பழனிச்சாமி அல்ல பச்சை துரோக பழனிச்சாமி. மண்புழு போல தவழ்ந்து தவழ்ந்து ஆட்சியை பிடித்தவர். மிகச் சிறந்த அடிமை என்று பெயர் பெற்று பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவிற்கு மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிச்சாமி. திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களின் கவலைகள் தீரும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பது தான் முக்கியமானதாக கருதுகிறேன்.
இதில், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருபவன் தான் இந்த மு.க.ஸ்டாலின். சென்னை மேயராக இருந்த காலத்தில் பெரிய மேம்பாலம் கட்டியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது, குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனம் மூலம் நடவடிக்கைகள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
நான் அமைச்சராக இருந்தபோது கூட்டு குடிநீர் திட்டம் மகளிர் மேம்பாட்டுகான மகளிர் சுய உதவிகுழு அமைத்து உதவியது என பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்று பேசினார்.



