Type Here to Get Search Results !

அதிமுகவின் கட்டடம் ஸ்டிராங்கு, பேஸ்மெண்ட் வீக்; சசிகலாவை வரவேற்க எப்படி இவ்வளவு கூட்டம் கூடுது? -அரசியல் விமர்சகர் அருணன்

பெங்களூரிலிருந்து தொடர்ந்து, 23 மணி நேரம், கார் பயணத்திற்கு பின்னர் சென்னை வந்தடைந்தார் சசிகலா. சசிகலாவின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள் நீக்கப்பட்டு வந்தது மாதிரி, சசிகலாவுக்கு வழிநெடுகிலும் ஆதரவு தெரிவித்து வரவேற்றவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மூத்த அரசியல் விமர்சகர் அருணன், ‘அதிமுகவின் கட்டடம் ஸ்டிராங்கு, பேஸ்மெண்ட் வீக். இல்லாட்டி, இவ்வளவு கூட்டம் சசிகலாவை வரவேற்க எப்படி கூடுது?’ என்று கேட்கிறார்.

சசிகலாவின் பேட்டியை பார்த்தால் எடப்பாடியார் கோஷ்டி பயந்தது நியாயம் எனப்படுகிறது. முதல்வரே பின்னுக்குப் போவார் போலும். இதில் துணை முதல்வர் எங்கிருப்பாரோ?’ என்கிறார். அன்புக்கு நான் அடிமை; அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். பொறுத்திருந்து பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துபேசியிருந்தார் சசிகலா.


எடப்பாடியார் கோஷ்டி கொடியை காப்பாற்றுகிறது. ஆனால், தொண்டர்களை பறிகொடுத்து கொண்டிருக்கிறது! தேர்தல் காலத்தில்  கட்சியில்  புதுசா ஆட்களை சேர்ப்பாங்க! எடப்பாடியார் நிலைமையை பாருங்க, இருக்கிறவங்களையும் வெளியேத்திக்கிட்டு இருக்காரு! கஷ்டகாலம்கிறது இதுதான்!’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies