Type Here to Get Search Results !

காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை –உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்(27). இவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் ஜெம்புநாதபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். இதுதொடர்பாக சம்பவத்தன்று காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, திடீரென காவல்நிலைய மாடிக்கு சென்ற பிரசாத் அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.


இதில், பலத்த காயமடைந்த அவரை, போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மத்திய மண்டல ஐஜி, ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் காவல்நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


மேலும், துறையூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புவியரசும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஜெம்புநாதபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முகமது ரபி, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies