திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றும் அதிமுகதான் பாஜகவின் பி டீம் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அறிவித்த எந்தத் திட்டத்தையும் முடித்துத் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா எங்கள் அம்மா என்றனர். இப்போது டெல்லியிலிருந்து என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கின்றனர். தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றனர்.
பாஜக.வின் பி டீமாக அதிமுகதான் இயங்குகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை. நாங்கள் நேரடியாக அரசியல் செய்யத் தெரிந்தவர்கள். திமுகவில் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரி தொடர்பாக கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். அதைத்தாண்டி யாரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் ஏற்பட்டால் ஸ்டாலின் எடுப்பார். மக்களிடம் ஸ்டாலின் மனுக்களைப் பெறத் தொடங்கிய பின்னரே போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறார்.
இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார்.
 


 
 
 
 
 
 
 
 
 
