Type Here to Get Search Results !

காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியை: மாலை அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த கொடுமை

அரை நிர்வாண நிலையில் கிடந்த ஆசிரியை. பள்ளிக்கு போன டீச்சரை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிய கொடுமை

காலையில் பள்ளிக்கு சென்ற ஒரு ஆசிரியை மாலையில் ஒரு வயல் வெளியில் பிணமாக கிடந்ததால், அந்த பகுதி மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின்  மொராதாபாத் மாவட்டத்தில்மஜோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபட்புரா கிராமத்தில் ஒரு 25 வயதான பெண் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் .அந்த ஆசிரியை தினமும் பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் சிலர் அவரை நோட்டமிட்டு வந்துள்ளார்கள். 

மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆசிரியையிடம் கிண்டல் செய்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் எதையும் அந்த டீச்சர் பொருட்படுத்தாமல் தன் வேலையுண்டு மாணவர்களின் படிப்புண்டு என்று இருந்தார்


இதையடுத்து, கடந்த சனிக்கிழமை காலையில் வழக்கம்போல ஆசிரியை பள்ளிக்கு சென்றவர், அன்று இரவுவரை வீடு திரும்பவில்லை .அதையடுத்து, பதட்டமான அவரின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியையை தேடினார்கள். அப்போது, அவரின் சடலம் அங்குள்ள வயல்வெளியில் அரை நிர்வாண நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் .


அதன்பிறகு, அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது, போலீசாரிடம் அவரின்  உறவினர்கள் அந்த ஆசிரியையை, அந்த பகுதியை சேர்ந்த சிலர் பலாத்காரம் செய்து கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்கள். 


அதையடுத்து, போலீசார் கொலையாளிகள் குறித்து தகவலறிய, அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர். மேலும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies